ரவூப் ஹக்கீமின் செயலாளரின் வாகனம் தீக்கிரை

ரவூப் ஹக்கீமின் செயலாளரின் வாகனம் தீக்கிரை

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்பு செயலாளரும் கல்முனை மாநகர சபைக்கு யானை சின்னத்தில் 16ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருமான ரஹ்மத் மன்சூரின் வாகனம் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் கல்முனை செய்லான் வீதியில் இடம்பெற்றுள்ளதாகவும், வாகனம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரஹ்மத் மன்சூரின் சொந்த வாகனமான மொண்டிரோ ஜீப், குறித்த வீதியில் அமைந்துள்ள அவரது சாரதியின் வீட்டுக்கு அருகிலுள்ள நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே தீயிடப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]