ரவி ஜயவர்தன இராஜினாமா

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்தன இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தனது இராஜினாமா கடிதத்தை ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் ஒப்படைத்துள்ளார்.

கடந்த மூன்று வருட காலமாக அந்த பதவியில் இருந்து நிலையில் தனிப்பட்ட காரணத்திற்காக பதவியை இராஜினாமா செய்வதாக அவர் கூறியுள்ளார்.

ரூபவாஹினி நிறுவனத்தை இலாபம் உழைக்கும் நிறுவனமாக மாற்றி, மக்களிடம் ஜனரஞ்சகப்படுத்துவதற்கு தனக்கு முடிந்ததாகவும், இதனால், திருப்தியுடன் நிறுவனத்திலிருந்து விடைபெறுவதாகவும் மேலும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]