ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராகிறார்?

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரிக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய சீனியர் அணியின் இயக்குனராகவும், பயிற்சியாளராகவும் இருந்தவர் ரவி சாஸ்திரி. இவர் 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அந்த பதவியில் இருந்தார்.

அவரது பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கும்ப்ளே தனது ஒரு வருடகால பதவிக்காலம் முடிந்த பின்னர், விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பதவியில் இருந்து விலகினார்.

ரவி சாஸ்திரி

கும்ப்ளே 2-ஆவது முறையாக தேர்வுசெய்யப்படலாம் என்ற நிலை இருந்தது. இதனால் முக்கியமான நபர்கள் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்யவில்லை. சேவாக் மற்றும் டாம் மூடி ஆகியோர் மட்டுமே முக்கியமானவர்கள்.

இதனால் மேலும் பலரது விண்ணப்பங்களை வரவேற்கும் வகையில் விண்ணப்பத்திற்கான கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

ரவி சாஸ்திரி

இதுகுறித்து பத்திரிகை ஒன்றுக்கு ரவி சாஸ்திரி அளித்துள்ள தகவலில் ‘‘தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்ய முடிவு செய்துள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார். இதனால் ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராக அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]