ரவி கருணாநாயக்கவிற்கு இந்திய பிரதமர் வாழ்த்து

இந்தியாவுடனான உறவை இலங்கை அரசாங்கம் தொடரும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் பதவியை ஏற்று தமது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை நேற்று இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள அமைச்சர் இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார்.ரவி கருணாநாயக்கவிற்கு

இதன்போது இந்திய பிரதமர் புதிய வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றமைக்கு அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அனத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபத்தினையும் தெரிவித்தார்.

இந்தியா, இலங்கைக்கு தொடர்ந்தும் குறித்த விடயங்களில் உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் இந்தியப்பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]