ரவிராஜ் கொலை: ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய மேன்முறையீட்டு மனுவொன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த மனு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக, மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க உத்தரவிடப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவே இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஜூரிகள் சபையின் ஒருமித்த தீர்மானத்திற்கு அமைவாக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் குறித்த கடற்படை வீரர்கள் நிபந்தனையற்ற பிணையில் விடுவிக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என, மேன்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்றைய தினம் இடம்பெற்ற நிலையில், குற்றம்சாட்டப்பட்டு நிபந்தனையற்ற பிணையில் விடுவிக்கப்பட்ட ஐந்து கடற்படை வீரர்களில் மூன்று பேர் நீதிமன்றில் முன்னிலையாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]