ரவியை நீக்குவது நாட்டுக்கு நல்லது : துமிந்தவை நீக்குவது சு.கவுக்கு நல்லது!

ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியில் இருந்தும் துமிந்த திஸாநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ரவியை நீக்குவது நாட்டுக்கு நல்லது எனவும், துமிந்தவை நீக்குவது கட்சிக்கு நல்லது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“2020 இல் தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்குடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பயணித்துக்கொண்டிருக்கின்றது. ஆனால், அந்த இலக்கை அடைய முடியாமல் சில தடைகள் போடப்படுகின்றன. அந்தத் தடைகள் இப்போதிலிருந்தே நீக்கப்பட வேண்டும்.

அரசில் உள்ள அமைச்சர்கள் பலர்தான் அந்தத் தடைகள்.அவர்கள் நீக்கப்பட்டால் எல்லாம் சரிவரும்.முதலில் ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியில் இருந்தும் துமிந்த திஸாநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட வேண்டும். ரவியை நீக்குவது நாட்டுக்கு நல்லது. துமிந்தவை நீக்குவது கட்சிக்கு நல்லது.

ரவியை நீக்குவது

ரவி நிதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது நல்ல விடயம். ஆனால், அவர் இப்போது வகிக்கும் அமைச்சுப் பதவியில் இருந்தும் நீக்கப்பட வேண்டும். அதாவது, அமைச்சுப் பதவியே அவருக்கு வழங்கப்படக்கூடாது. ஊழல்வாதிகளுக்கு இடங்கொடுத்தால் நாடு சீரழிந்துவிடும். அது சுதந்திரக் கட்சியையும் பாதிக்கும்.

துமிந்த திஸாநாயக்கவை கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கினால் கட்சி உறுப்பட்டுவிடும். அவர் ஒரு குழந்தை. அவரால் கட்சியை வெற்றிபெறச் செய்ய முடியாது. முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் அவர் அண்மையில் கூறிய கருத்து பாரதூரமானது. மஹிந்தவுக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படமாட்டாது என்று கூறும் அதிகாரம் அவருக்கு இல்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]