ரவிசாஸ்திரிக்கு 7½ கோடி ரூபா சம்பளம்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான ரவிசாஸ்திரிக்கு இந்திய ரூபா மதிப்பில் 7½ கோடி ரூபா சம்பளமாக வழங்க இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முன்வந்துள்ளது.

கிரிக்கெட் சபை தலைவர் சி.கே.கண்ணா, செயலாளர் அமிதாப் சவுத்ரி, நிர்வாக குழு உறுப்பினர் டயனா எடுல்ஜி, தலைமை செயல் அதிகாரி ராகுல்ஜோரி ஆகியோர் கொண்ட 4 பேர் குழு இந்த சம்பள தொகையை முடிவு செய்துள்ளது. இந்த சம்பளத்தை கண்டு பலர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது .

மேலும், துணை பயிற்சியாளரான சஞ்சய் பங்கருக்கு இந்திய ரூபா மதிப்பில் 2.3 கோடி ரூபாவும், இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான பாரத் அருணுக்கு 2.20 கோடி ரூபாவும், களத்தடுப்பு பயிற்சியாளரான ஸ்ரீதருக்கு 2 கோடி ரூபாவையும் இக்குழு நிர்ணயித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]