ரவிக்கு எதிராக சட்டநடவடிக்கை – ஜனாதிபதி

ரவிக்கு எதிராக சட்டநடவடிக்கை

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்கழுவின் விசாரணை அறிக்கை தொடர்பில் தனது விஷேட உரையின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாவது,

மத்திய வங்கியில் 2008 ம் ஆண்டு முதல் இவ்வாறு மோசடி இடம்பெற்றுள்ளதாகவும், அது தொடர்பில் தேடிப்பார்க்க முழுமையான கணக்காய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டியதே முதலில் செய்ய வேண்டியது என்று அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

இது இலங்கை மத்திய வங்கியால் செய்ய வேண்டியுள்ளதுடன் அதன் மூலம் கிடைக்கும் தகவல்களுக்கு அமைய சட்ட நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டும் என்றும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

அந்தக் காலதத்திலேயே அதிகமாக EPF நிதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஆணைக்கழு சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

இந்த அறிக்கையின் பிரதி தன்னால் தற்போது சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன மகேந்திரன் மற்றும் வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட வேறு நபர்களின் தலையீட்டின் காரணமாக பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தால் சட்டத்திற்கு மாறான முறையில் பணம் உழைக்கப்பட்டிருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மகேந்திரன் தன்னிச்சையான தீர்மானத்தின் ஊடாக பிணைமுறி விநியோகத்தின் போது உள்ளக தகவல்களை பகிரங்கப்படுத்தியுள்ளமைக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அர்ஜுன் மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்தமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்புடையவர் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

எலோசியஸ் குடும்பத்துக்கு சொந்தமான மற்றும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த “வோல்ட் என்ட் ரோ” நிறுவனத்தால் பெண்ட் ஹவுஸ் மாடி வீட்டுக்கு வாடகை செலுத்தியமை சம்பந்தமாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பொறுப்பு ஏற்க வேண்டும்.

அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட வேண்டும் என்பதுடன் ஆணைக்குழு முன்னிலையில் பொய் சாட்சி வழங்கியதற்காக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]