ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ரயில் விபத்தில்

மருதானையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருவளை – மரக்கலாவத்தை பகுதியில் ரயில் பாதையில் சென்று கொண்டிருந்த இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞனே உயிரிழந்ததுடன், அவரது சடலம் நாகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]