ரயில் விபத்தில் இருவர் பலி

ரயில் விபத்தில் இருவர் பலி

பேராதனை – எலுகொட ரயில் குறுக்கு வீதியில் மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]