ரயில் பொதிப் போக்குவரத்துக் கட்டணம் 50 சதவீதத்தால் அதிகரிப்பு

இலங்கை புகையிரத திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பொதிப் போக்குவரத்து கட்டணத்தில் மாற்றங்களை கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கை புகையிரத திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பொதிப் போக்குவரத்துக்கு, கடந்த 9 வருங்களாக, எவ்விதத் திருத்தமும் மேற்கொள்ளாமல், ஒரே வகையான கட்டணங்களே அறவிடப்படுகின்றன.

அதனால், சாதாரண மக்களுக்கு மேலதிக சுமையை சுமத்தாமல், வணிகமற்ற மற்றும் நுகர்வுத் தேவையின் அடிப்படையில், போக்குவரத்து பொதிகள் தவிர்ந்த ஏனைய பொதிகள் போக்குவரத்துக்காக, தற்போது அறவிடப்படுகின்ற கட்டணங்களை, 50 சதவீதத்தால் அதிகரிப்பது தொடர்பில், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.