ரயில் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

சகல ரயில் சேவை ஊழியர்களது விடுமுறைகளையும் இரத்து செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ரயில் தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழு இன்று (29) மேற்கொள்ள உள்ள வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தம் காரணமாக மக்களுக்கு எவ்வித அசௌகரியங்கள் ஏற்படக்கூடாது என்பதனை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ் விதானகே தெரிவித்துள்ளார்.

எனினும், இன்று (29) பிற்பகல் 4 மணியில் இருந்து தமது வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதாக ரயில் தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழுவின் செயலாளர் கமல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]