ரயிலில் வியாபாரம் செய்த இரண்டு பேருக்கு அபராதம்

ரயில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ரயிலில் வியாபாரம் செய்த குற்றத்தை ஏற்றுக் கொண்ட குற்றவாளிகள் இருவருக்கு, கம்பஹா மேலதிக மாஜிஸ்திரேட் நீதிவான் லலித் கன்னங்கர, ஒருவருக்கு தலா ஆயிரம் ரூபா வீதம் இருவருக்கும் இரண்டாயிரம் ரூபா அபராதம் விதித்தார்.

கம்பஹா, வெயாங்கொடை மற்றும் ராகம ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடைப் பட்ட பகுதிகளிலேயே, இவர்களைக் கைது செய்ய முடிந்ததாக, ரயில்வே திணைக் கள பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட ரீ. முருகையா, ஜீ.ஏ.பேமவதீ ஆகிய இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட தினத்தில் நீதிமன்றம் சமூக மளிக்காத சுதர்சன தீபால், சரத் குமார ஆகியோருக்கு பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ரயில்வே திணைக்கள அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டனர்.