ரயிலில் யாசகம் பெற தடை

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் புகையிர பயண பெட்டிகள் மற்றும் புகையிர நிலையங்களில் யாசகம் பெறும் யாசகர்களை அகற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் குறித்த நடவடிக்கை முனனெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

யாசகர்கள் மற்றும் வியாபாரிகள் தொடர்பில் பயணிகளால் வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டை கவனத்தில் கொண்டு இதனை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]