ரயிலில் மோதுண்ட வயோதிபர் உடல் சிதறி பலி!!

யாழ்ப்பாணம் – அரியாலை – முள்ளிப் பிரதேசத்தில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் உடல் சிதறி உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் யாழ்.கொழும்புத்துறையைச் சேர்ந்த செல்லையா கந்தசாமி என்ற 73 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கிப் பயணித்த ரயிலிலேயே இவர் மோதுண்டு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.