ரயன் ஜயலத்தின் மனு எதிர்வரும் 9ஆம் திகதி விசாரணையில்

ரயன் ஜயலத்தின்மருத்துவ பீட நடவடிக்கை குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத்தின்பிணை கோரிய மனு எதிர்வரும் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று இதனை அறிவித்தார்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவர் சார்பில் பிணை கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு மேல் நீதிமன்றில் அது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி இந்த அறிவித்தலை விடுத்தார்.