ரமித் ரம்புக்வெல்ல பிணையில்

ரமித் ரம்புக்வெல்ல பிணையில் செல்ல அனுமதி

நாவல பிரதேசத்தில் வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு காவல்துறை பிணையில் விடிவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வரும், கிரிக்கட் வீரருமான ரமித் ரம்புக்வெல்ல பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றையதினம் கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில், அவரை 5 லட்சம் பெறுமதியான சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இரத்து செய்யுமாறும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு ஜூன் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 9 ஆம் திகதி இரவு நாவல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தினைத் தொடர்ந்து துப்பாக்கியை காட்டி இரண்டு பல்கலைக்கழக மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பாகவே ரமித் ரம்புக்வெல்லவை பொலிஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]