ரபாடா இரண்டு போட்டிகள் விளையாடத் தடை

ரபாடா

ரபாடா இரண்டு போட்டிகள் விளையாடத் தடை

தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடந்து முடிந்தது. நான்காவது நாளுடன் முடிவடைந்த இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு இளம் பந்து வீச்சாளரான ரபாடா முக்கிய காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்களையும், 2 இன்னிங்சில் 6 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

முதல் இன்னிங்சில் ஸ்மித்தை எல்பிடபிள்யூ மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். ஸ்மித் வெளியேறிய போது, மகிழ்ச்சியில் ஸ்மித் மீது தோள்பட்டையை வைத்து இடித்தார். இதனால் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 2-வது இன்னிங்சில் வார்னரை க்ளீன் போல்டாக்கினார். வார்னர் அவுட்டானதும் அவரது முகம் அருகில் சென்று கொக்கரித்தார்.

இவரின் செயலுக்காக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் அவ்வாறு நடந்து கொண்டதற்காக 2 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]