முகப்பு Cinema ரன்வீர் சிங்கின் ஜோடியான சயிப் அலி கானின் மகள்

ரன்வீர் சிங்கின் ஜோடியான சயிப் அலி கானின் மகள்

நடிகர் சயிப் அலி கானின் மகள் சாராவின் முதல் படம் பிரச்சனையாகி பாதியில் நின்றுள்ள நிலையில் அவர் பெரிய படத்தின் ஹீரோயினாகியுள்ளார்.

பொலிவுட் நடிகர் சயிப் அலி கானின் முதல் மனைவியான அம்ரிதா சிங் மூலம் பிறந்தவர் சாரா அலி கான்.

அவர் அபிஷேக் கபூர் இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது இயக்குனருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

முதல் படமே கிடப்பில் போடப்பட்டதும் சாரா அலி கானுக்கு அடுத்து பட வாய்ப்பு வருமா என்ற கேள்வி எழுந்தது. அவர் வேறு பட வாய்ப்பை பெற தீவிரமாக செயல்பட்ட நிலையில் மசாலா படங்களை கொடுப்பதற்கு பெயர்போன இயக்குனர் ரோஹித் ஷெட்டி ரன்வீர் சிங்கை வைத்து சிம்பா என்ற படத்தை எடுக்கிறார்.

அந்த படத்தில் ரன்வீர் சிங்கின் ஜோடி சாரா அலி கான் நடிக்கிறார். சிம்பா படத்தில் ரன்வீர் ஜோடியாக ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடிக்கக்கூடும் என்று கூறப்பட்டது. ஏன் ரன்வீரின் காதலி தீபிகா படுகோனே நடிப்பார் என்று கூட செய்திகள் வெளியாகியன. இறுதியில் சாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஜாக்பாட் முதல் படம் கிடப்பில் போடப்பட்டாலும் பொலிவுட்டின் முன்னணி நடிகரின் படத்தில் சாரா நடிக்க உள்ளார் . சிம்பா படத்தை கரண் ஜோஹார் தயாரிக்கிறார். இப்படம் டிசம்பர் மாதம் 28ஆம் வெளியாக உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com