ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்கு விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் சிங்கப்பூர் நோக்கிப் பயணிக்கவுள்ளார்.

சிங்கப்பூரில் இடம்பெறும் ஆறாவது சர்வதேச நகர மாநாடு மற்றும் சிங்கப்பூர் சர்வதேச நீர் வார நிகழ்வு, தூய்மையான சூழல் மாநாடு ஆகிய மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார்.

பிரதமரின் இந்த விஜயத்தின்போது சிங்கப்பூர் பிரதமர் லீ சின் லுங், பிரதிப் பிரதமர் மற்றும் அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் கோ சொக் டொன் உள்ளிட்ட சிங்கப்பூர் அரசாங்கத்தின் உயர் மட்ட அமைச்சர்கள் பலரை சந்திக்கவுள்ளார்.

அத்துடன், ஜூலை 09 ஆம் திகதி சர்வதேச நகர மாநாட்டின் ஆரம்ப அமர்வில் ‘நகர அபிவிருத்தி மற்றும் சூழலைப் பாதுகாத்தல்’ எனும் தலைப்பில் பிரதமர் உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]