ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஐ.தே.கவால் வராது

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட மாட்டாது என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணி, பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருமாக இருந்தால், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலரின் ஆதரவை அதற்கு வழங்குவதா? இல்லையா? என்பதை தீர்மானிப்பது அதில் அடங்கியுள்ள விடயங்களை அவதானித்ததன் பின்னரே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வேறு ஒரு குழுவினால் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவருவதாயின் அதற்க ஆதரவு வழங்குவது தொடர்பில் ஐ.தே.க குழுவினருடன் கலந்துரையாடவும் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அமைச்சரவை மறுசீரமைப்பின் பின்னர், ஊடகங்களிடம் பகிரங்கமாக பிரதமரை மாற்ற வேண்டும் எனவும், நல்ல வழிமுறையிலோ அல்லது கெட்ட வழிமுறையிலோ அவரை மாற்றியே ஆவதாகவும் வசந்த சேனாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]