ரணில் விக்ரமசிங்கவின் சிங்கபூர் விஜயத்தில் சந்தேகம் – மாகல்கந்தே சுதந்த தேரர்

மாகல்கந்தே சுதந்த தேரர்

சிங்கப்பூருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஜயம் மேற்கொண்டுள்ளமை தொடர்பில் தனக்கு சந்தேகம் இருப்பதாக “சிங்கள ராவய” அமைப்பின் தேசிய அமைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகால சந்தேக நபர் அர்ஜுன் மகேந்திரன், சிங்கப்பூரில் தங்கியுள்ள இடம் தொடர்பில் பிரதமரின் விஜயத்தின் பின்னர் புலனாய்வுத்துறையினருக்கு தகவல்கள் கிடைக்கும் எனவும் தேரர் கூறியுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படும் விதம் தொடர்பில் நாட்டு மக்கள் மிகவும் அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]