கொழும்பில் வீடு கட்ட நிலங்கள் இல்லை

 ரணில் விக்கிரமசிங்ககொழும்பு நகரில் வீடொன்றை நிர்மாணிப்பதற்கு போதியளவு நிலங்கள் இல்லை
என ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐ.தே.க எம்.பி. எம்.ஹெச்.சால்மன் எழுப்பிய ஒரு கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த கருத்தை வெளியிட்டார்.

“நிலச்சீர்திருத்தத்தைப் பற்றி அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும், நிலங்களைப் பற்றிய கொள்கைகளை உருவாக்கிய காலகட்டத்தில் நாட்டில் 5 மில்லியன் மக்கள் மட்டுமே இருந்தனர், இப்போது நாம் அக்கொள்கைகளை மாற்ற வேண்டும் ” என்று அவர் கூறினார்.

இருப்பினும், நிலமற்றவர்களுக்கு நிலங்களை வழங்குவதற்கான தேர்தல் வாக்குறுதிகளை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் என அவர் உறுதிபடக் கூறினார்.