ரணில் மீண்டும் பிரதமர் ஆனால் ஒரு மணித்தியாலமேனும் ஜனாதிபதி பதவியில் நீடிக்கமாட்டேன்- மைத்திரி அதிரடி அறவிப்பு!!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் நிலைப்பாரா? அவருக்கு பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் உள்ளதா? என பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால இது தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மீளவும் பிரதமராக பதவி வகித்தால் ஒரு மணித்தியாலமேனும் ஜனாதிபதி பதவியில் நீடிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால கூறியுள்ளார்.

சற்று நேரத்துக்கு முன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் ஒருவர் அரசியல் சாசனத்தை காண்பித்து ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவி வழங்குமாறு கோரியிருந்தார். அரசியல் சாசனத்தின் குறிப்பிட்ட சரத்தின் அடிப்படையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை பிரதமருக்கும் வழங்குமாறும் கோரியிருந்தார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியின் அதிகாரங்களை போலவே செயலாற்றி வந்தார், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அவருடன் கடமையாற்றி வந்தேன். அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நொடியே பதவியை இராஜினாமா செய்துவிடுவேன் என மைத்திரிபால மேலும் கூறியுள்ளார்.

இதன் மூலம் ஜனாதிபதி , பிரதமர் மகிந்தவுக்கு ஆட்சி பலம் உள்ளது என்று கூறியுள்ளாரா அல்லது அது தொடர்பில் குழப்பத்தில் உள்ளாரா? என பல சந்தேகங்கள் எழுந்துள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]