ரணில் அரசாங்கத்துக்கு ஆதரவு இல்லை – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகக் கொண்டு அமைக்கப்படும் எந்தவொரு அரசாங்கத்துக்கும் ஆதரவு அளிக்கவோ அந்த அரசாங்கத்தில் பங்கேற்கவோ போவதில்லை என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பேச்சாளர் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை இந்திய மற்றும் அமெரிக்க உயர்ஸ்தானிகர்கள் இன்று சந்தித்து பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளுராட்சி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிப்பெற்றதை அடுத்து கொழும்பு அரசியலில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]