ரணிலின் ஆதரவாளர்களின் செயற்பாட்டால் ஆடிபோயுள்ள மஹிந்த தரப்பினர்?

இலங்கையில் புதிய பிரதமாராக மஹிந்த ராஜபக்ச கடந்த மாதம் 26 ஆம் திகதி பதவி ஏற்ற போதும் , அவர் தனது பெரும்பான்மை பலத்தை பாராளுமன்றில் நிருபிக்கும் வரை பிரதமரின் உத்தியோகபூர்வ வசிப்பிடமாகிய அலரி மாளிகையை விட்டுகொடுக்கப்போவதில்லை என ரணில் விக்கிரமசிங்க விடாப்பிடியாக உள்ளார்.

இன்று வரை ஐக்கிய தேசிய கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அலரி மாளிகையில் , நீர் விநியோகம் , மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு இருந்தாலும் அங்கு பெருமளவு ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவு தரப்பினர் குழுமியுள்ளனர்.

தினமும் ஏதாவது ஒரு ஊடக சந்திப்பு அங்கு நடைபெற்று வருகின்றது. பல முக்கியஸ்தர்கள் அங்கு சென்று ரணிலுடன் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் , இரவு நேரங்களில் அலரி மாளிகை களியாட்ட விடுதி போல உள்ளது. தினமும் அங்கு ஆடல் பாடல் என பல நிகழ்வுகள் களைகட்டி இருக்குறது.

பாராளுமன்ற பெரும்பான்மை பலம் தம்மிடமே உள்ளது. ரணிலின் ஆட்சி முடிந்து விட்டது என மஹிந்த தரப்பு கூறி வரும் நிலையில் அவை எதையும் பெரிதாக அலட்டி கொள்ளமால் இப்படி உல்லாசமாக இருந்து வரும் ரணில் தரப்பின் செயற்பாட்டால் மஹிந்த தரப்பு ஆடிபோயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]