ரணவிரு சேவையின் கீழ் மட்டக்களப்பில் நிருமாணிக்கப்படும் 39 வீடுகளும் டிசம்பர் 25ஆம் திகதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும்

ரணவிரு சேவையின் கீழ் மட்டக்களப்பில் நிருமாணிக்கப்படும் 39 வீடுகளும் டிசம்பர் 25ஆம் திகதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும்

ரணவிரு சேவையின்

ரணவிரு சேவையின் கீழ் மட்டக்களப்பில் நிருமாணிக்கப்படும் 39 வீடுகளும் டிசம்பர் 25ஆம் திகதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும். மாவட்ட அலுவலர் ரீ.எச். கீர்த்திகா ஜயவர்தன

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த படையினர் மற்றும் பொலிஸாரின் குடும்பங்களுக்காக மட்டக்களப்பில் நிருமாணிக்கப்பட்டு வரும் 39 வீடுகளும் டிசம்பர் 25ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்யப்பட்டு விட வேண்டும் என “ரணவிரு சேவா” அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் ரீ.எச். கீர்திகா ஜயவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பாக திங்கட்கிழமை 11.12.2017 வீடமைப்புத் திட்டங்களைப் பார்வையிட்ட பின் “ரணவிரு சேவா” பயனாளிக் குடும்பங்களுடனான சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

ரணவிரு சேவையின்ரணவிரு சேவையின்

வீடமைப்புத் திட்டம்பற்றி மேலும் தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் “ரணவிரு சேவா” பயனாளிக் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டோருக்கான வீடமைப்புத் திட்டம் தற்போது அமுலாகிக் கொண்டிருக்கின்றது.

ஒவ்வொன்றும் தலா 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலமைந்த இந்த வீடுகளை நிருமாணிக்கும் திட்டம் கடந்த ஜுன் மாதம் 19ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தற்போது நிறைவுறும் தறுவாயிலுள்ள இந்த வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளன. வைபவரீதியாக கையளிக்கப்படவுள்ள இந்த வீடுகளை பயனாளிகள் விரைவில் பூர்த்தி செய்து விட வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளார்கள்.

வாழைச்சேனை, ஓட்டமாவடி, ஏறாவூர், மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, பட்டிப்பளை மற்றும் மங்களகம ஆகிய இடங்களில் 19 வீடுகள் தமிழ் சமூக ரணவிரு குடும்பங்களுக்கும் 19 வீடுகள் முஸ்லிம் சமூக ரணவிரு குடும்பங்களுக்கும் 1 வீடு சிங்கள சமூக ரணவிரு குடும்பத்திற்கும் நிருமாணிக்கப்பட்டு வருகின்றன.

ரணவிரு சேவையின்ரணவிரு சேவையின்

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மரணித்த, காணாமல்போன, அல்லது சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த படையினர் மற்றும் பொலிஸாரில் தங்கி வாழ்ந்த 136 குடும்பங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வரை இனங்காணப்பட்டுள்ளார்கள்.

இவர்களுக்கான சேமநலன்களை “ரணவிரு சேவா” கவனித்து வருகின்றது.
“ரணவிரு சேவா” பயனாளிக் குடும்பங்களுக்கு வீடமைப்பு உட்பட வாழ்வாதாரத் தொழில் முயற்சிகள், தொழிற் திறன் பயிற்சிகள், நலனோம்பு சேவைகள், சேதனப் பசளை தயாரிப்பு, பண்ணை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு நலன்புரி சேவைகளில் தாம் பணியாற்றி வருவதாக கீர்த்திகா மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]