யாழ்.பல்கலைக்கழக கலை, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ பீடங்களை இடைநிறுத்துவதாக துணைவேந்தர் ரட்ணம் விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்

யாழ்.பல்கலைக்கழக கலை, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ பீடங்களை இடைநிறுத்துவதாகவும் நாளை (01.11) விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களையும் வெளியேறுமாறும் துணைவேந்தர் ரட்ணம் விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திப பல்கலைக்கழக மாணவர்கள் நிர்வாக முடக்கங்களை முன்னெடுத்ததுடன், வகுப்பு பகிஸ்கரிப்பினையும் முன்னெடுத்து வருகின்றார்கள்.

மாணவர்களின் அசாதாரண நிலமைகளை தொடர்பில் நாளை (31.10) பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகள், ஆராய்ந்துள்ளனர். ஆராய்ந்ததின் பிரகாரம், கலைப்பீடம், விஞ்ஞானபீடம் மற்றும் முகாமைத்துவம் மற்றும் வணிக கற்கைகள் பீடம் ஆகிய பீடங்களின் கல்வி நடவடிக்கைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இடை நிறுத்துவதாகவும், பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில் ஊடாக மாணவர்கள் உட்புகுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களையும் நாளை (01.11) மாலை 4.00 மணிக்குள் விடுதியில் இருந்து வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.