ரஜினி, கமலை டுவிட்டரில் முந்தியுள்ளா நடிகை ஸ்ருதிஹாசன்!

டுவிட்டரில் அப்பா கமல்ஹாசன், ரஜினியை முந்தியுள்ளா நடிகை ஸ்ருதிஹாசன்.

டுவிட்டரில் ஸ்ருதிஹாசனுக்கு ஏராளமான ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர். எப்போதும் டுவிட்டரில் ஆக்டிவாக உள்ள ஸ்ருதி, ரசிகர்களின் டுவீட்டுக்கு பதில் அளிப்பார். இந்நிலையில் டுவிட்டரில் ஸ்ருதி புதிய சாதனை படைத்துள்ளார்.

ரஜினி, கமலை டுவிட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை தொடவில்லை. ஆனால் ஸ்ருதி ஹாசனை டுவிட்டரில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 7 மில்லியனை தொட்டுள்ளது.

ஆனால் தனுஷ் ஸ்ருதியை முந்தியுள்ளார். தனுஷை 7.25 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். புதுப்படங்கள் எதிலும் ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தமாகவில்லை. ஆனால், தனது காதலர் மைக்கேலை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகக்கூடும் என கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]