ரஜினியை சூப்பர் ஸ்டாராகவே பார்க்க விரும்புகிறேன்: கவுதம்

கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘இவன் தந்திரன்’. இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், மதுரையில் ‘இவன் தந்திரன்’ சினிமா டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் கவுதம் கார்த்திக் கலந்து கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘இவன் தந்திரன்’ படத்தில் பொறியியல் கல்லூரி மாணவனாக நடிக்கிறேன். இது எனக்கு முக்கியமான படமாக அமையும். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பிடிக்கவில்லை என்று நான் கூறியதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது. இது உண்மை அல்ல. சூப்பர் ஸ்டார் எங்களின் குடும்ப நண்பர்.

நான் சிறுவயது முதலே அவரின் தீவிர ரசிகனாக உள்ளேன். என்னை பொருத்த வரையில், தமிழகத்தின் சூப்பர் ஸ்டாராக அவரை ரசித்து பார்க்கவே விரும்புகிறேன். மற்றபடி அரசியலுக்கு வருவதும், வராததும் அவரின் விருப்பம். இதுகுறித்து நான் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.

என் அப்பா (நடிகர் கார்த்திக்) அரசியலுக்கு வந்ததில் எனக்கு விருப்பம் இல்லை. எனவே நான் எதிர்காலத்தில் நிச்சயமாக அரசியலுக்கு வரமாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]