ரஜினியை அசிங்கப்படுத்தி திருப்பி அனுப்பிய வாலிபர்- வீடியோ உள்ளே ரஜினிக்கு இந்த அவமானம் தேவைதானா??

காயமானவர்களை பார்க்க ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றிந்தார்.அங்கு ஒரு வாலிபர் ரஜினியை ‘ஆமா நீங்க யாருங்க’ என வெறுப்புடன் கேள்வி கேட்க ரஜினிகாந்த் சிரித்துக் கொண்டே முகம் வெளிறியபடி நகரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.

தூத்துக்குடியில் 13 பேர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்டனர்.

எல்லா பிரச்சனைகளும் முடிந்து தூத்துக்குடி மக்கள் இப்பொழுது தான் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையும் மூடப்பட்டு விட்டது.இந்நிலையில் தூத்துக்குடிக்கு ரஜினி வருகை தந்தார்.

அங்கு போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை மட்டும் பார்த்து ‘சிரித்துவிட்டு’ சென்னை திரும்பிவிட்டார்.

மருத்துவமனையில் இளைஞர் ஒருவருடன் ரஜினிகாந்த் சிரித்தபடியே நடத்தும் உரையாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில்,

ரஜினி தனது பெட் அருகே வருகின்றார்… எந்த பதட்டமும் இல்லாமல் படுத்து கிடக்கும் அந்த வாலிபர், சர்வ சாதரணமாக எழுந்து ரஜினியை பார்த்து யாரு நீங்க என கேட்டதும் ரஜினிக்கு என்ன சொல்வது எனப் புரியவில்லை.

நான் தாப்பா ரஜினிகாந்த் என்கின்றார். நீங்க ரஜினி தான் என்பது எங்களுக்கு தெரியாம இல்ல 100 நாள் நாங்க போராடும் போது எங்க போனீங்க அப்பல்லாம் வராம இப்ப வர்றீங்களே என்ற கருத்தில் அந்த வாலிபர் கேட்டதும் என்ன பதில் கூறவது என திகைத்து நின்று ரஜினிகாந்த் வாலிபரை பார்த்து சிரித்தபடி இரு கரம் கூப்பி சரி ப்பா நான் வர்றேன் எனக் கூறிவிட்டு அடுத்த நபருக்கு சென்று விடுகின்றார்.

இந்த காணொளி பலரால் கண்டு கொள்ளப்படவில்லை என்றாலும் தமிழ் ஆர்வலர்கள் பலர் இதை சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர்.

ரஜினிகாந்த் தனது அரசியலை அறிவித்த பின்னர் பாதிக்கப்பட்டவர்களை இது போன்று நேரில் சந்திப்பது இதுவே முதல் முறையாக பார்க்கப்படுகின்றது.தூத்துக்குடி சென்ற ரஜினியை அசிங்கப்படுத்தி திருப்பி அனுப்பிய வாலிபர்- வீடியோ உள்ளே

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]