முகப்பு Cinema ரஜினியுடன் மோதும் விஜய்சேதுபதி

ரஜினியுடன் மோதும் விஜய்சேதுபதி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் சூப்பர் ஸ்டாருடன் விஜய் சேதுபதி மோதும் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.

காலா படத்திற்கு பின்பு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷுட்டிங் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக டேராடூனில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் படத்தின் அடுத்த கட்ட ஷுட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னை பின்னி மில்லில் போடப்பட்டுள்ள செட்டில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் ரஜினி மற்றும் விஜய் சேதுபதி மோதிக்கொள்ளும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த படத்தில் ரஜினிக்கு முக்கிய வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இவர் முதல் முறையாக சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிப்பதால் அனைவரது மத்தியிலும் இந்தப்படம் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இந்த படத்தில் சிம்ரன், திரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா என பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com