ரஜினியின் 166வது படத்தில் இரண்டு நாயகிகளா? வெளியான தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வளைத்தளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவி வந்தது.

ஆனால், தகவலை மறுத்துள்ளார் ரஜினியின் பி ஆர் ஓ. இதுகுறித்து ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக உள்ள ரியாஸ் கே அமீது கூறுகையில், தற்போது இந்த படம் உறுதியாவது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.ஆனால், மற்ற விவரங்கள் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. அடுத்த மாதம் இந்த படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் அதுவரை இந்த ஆதாரமற்ற வதந்திகளை எல்லாம் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]