ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா- என்ன கொடும சரவனா இது??

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் இறைவி, பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் கார்த்திக் சுப்புராஜ். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த நிலையில், சூர்யா நடிப்பில் வந்த மௌனம் பேசியதே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் த்ரிஷா.

இப்படத்திற்குப் பிறகு பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள திரைப்படத்தில் த்ரிஷா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கயிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது தொடர்பாக எந்த முறையான அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]