ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் உறுதி!!!

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் உறுதி!!! 234 தொகுதிகளின் தனிக்கட்சி மூலம் போட்டியிடத் தீர்மானம்.

நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். உள்ளாட்சி தேர்தலுக்கு கால அவகாசம் இல்லாதாததால் போட்டியிடவில்லை. நான் பணம், பெயர் மற்றும் புகழுக்காக அரசியலுக்கு வரவில்லை. கனவில்கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஆயிரம் மடங்கு அதை மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.

இப்போது அரசியல் கெட்டுப்போய்விட்டது, ஜனநாயகம் சீட்கெட்டுப் போய்விட்டது. எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.