ரஜினிகாந்த்துடன் நடிக்கும் திரிஷாவின் கனவு நிறைவேறியது

தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்த திரிஷாவின் கனவு தற்போது நனவாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வடஇந்தியாவில் நடைபெற்று வருகின்றது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், நடிகை திரிஷாவும் இப்படக்குழுவில் இணைந்திருப்பதாக படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் தமிழ் சினிமாவில் ரஜினியுடன் மட்டும் இணையாத, நடிகை திரிஷாவின் கனவு தற்போது நனவாகி இருக்கிறது. நாயகியாக அறிமுகமாகிய 16 வருடங்களுக்கு பிறகு திரிஷா, ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.

அதேநேரத்தில் 18 வருடங்களுக்கு பிறகு சிம்ரனும், திரிஷாவும் ஒரே படத்தில் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]