ரசிகையால் கண்கலங்கிய சிவகார்த்திகேயன் -காரணம் உள்ளே!!

சிவகார்த்திகேயனை ரசிகை ஒருவர் கண்கலங்க வைத்துள்ளார். அப்படி என்ன பரிசு தந்திருந்திருந்தால் சிவகார்த்திகேயன் கண் கலங்கியிருப்பார்?

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து அசுர வளர்ச்சி அடைந்து கோலிவுட்டை அசர வைத்தவர் சிவகார்த்திகேயன்.

குட்டீஸ்களின் மனதில் ரஜினி, விஜய்யை அடுத்த இடத்தில் உள்ளார். சமீப காலமாக நடிப்பு தவிர படத் தயாரிப்பிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.தான் ஒவ்வொரு முறையும் விருது வாங்கும்போதும், இதனை பார்க்க தனது அப்பா உயிருடன் இல்லையே என்ற வருத்தத்தை அவரே பல இடங்களில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது தந்தையுடன் சேர்ந்து நிற்பது போன்ற ஒரு ஓவியத்தை ரசிகை ஒருவர் வரைந்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் ஆசையை ஓவியம் மூலம் நிறைவேற்றி வைத்துள்ளார் ரசிகை.

இதை பார்த்த சிவகார்த்திகேயன் ட்வீட்டரில், உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்றே தெரியவில்லை. மகிழ்ச்சியாகவும், எமோஷனலாகவும் உள்ளது. அப்பாவுடன் சேர்ந்து ஒரு நல்ல புகைப்படம் கூட எடுக்கவில்லை என்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. இது எனக்கு ஸ்பெஷலானது. நன்றி மா. தெய்வங்கள் எல்லாம் தோற்றேப்போகும் தந்தை அன்பின் முன்னே… என்று பதிவு செய்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]