ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த நடிகை

ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த நடிகை

ரசிகர்களை

தன்னுடைய கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாக உடல் எடை குறைந்திருக்கும் செல்ஃபி புகைப்படத்தை த்ரிஷா வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஓஹோ என்று இருந்தவர் நடிகை த்ரிஷா. தற்போது சினிமா வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

அடடே..! எப்படி இருந்த த்ரிஷா இப்போ இப்படி ஆயிட்டார்!

தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து 96 படத்திலும், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் சாமி – 2 படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

அதோடு, அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள சதுரங்க வேட்டை 2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில், எப்போதும் ஒல்லி நடிகையாக இருக்கும் த்ரிஷா, யோகா, உடற்பயிற்சி என்று தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில், முதன் முறையாக நிவின் பாலி நடிப்பில் உருவாகி வரும் ஹே ஜூட் என்ற மலையாள படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார்.

இப்படத்தில் த்ரிஷாவுக்கு இளமையான தோற்றம் என்பதால், வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டு தன்னுடைய உடலை துரும்பாக இளைக்க செய்துள்ளார்.

மேலும், ஆண்களுக்கு நிகராக கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.

34 வயதாகும் த்ரிஷா இந்தளவிற்கு இளமைக்கு திரும்பி இருப்பதைக் கண்டு ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இப்படத்திற்காக கிக் பாக்சிங் பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே த்ரிஷாவின் கிக் பாக்சிங் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]