ரசாயன ஆயுதங்களை மீண்டும் சிரியா பயன்படுத்தினால் அடுத்த நடவடிக்கைக்கும் தயார் : அமெரிக்கா

அமெரிக்கா ராணுவம் தயாராக உள்ளது

ரசாயன ஆயுதங்களை சிரியா பயன்படுத்தியதால், அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுத்த அமெரிக்கா, தனது நலனைக் காப்பதற்காக, அடுத்த நடவடிக்கைக்கும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

சிரியாவின் விமானதளத்தின் மீது நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய பிறகு புதிய தாக்குதல் பற்றி பேசியுள்ளது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற அவரச கூட்டத்தில் பேசிய அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தேசத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது மற்றும் அதை பரவலாக்குவது போன்றவற்றை நிறுத்தவேண்டும் என்று தெரிவித்தார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற அவரச கூட்டத்தில் பேசிய அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி

சிரியா அதிபர் பஷர் அல்-அசத், மீண்டும் ரசாயன ஆயுத்ததைப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஹெலி தெரிவித்தார்.

ரசாயன ஆயுதங்களை

“நாங்கள் இன்னும் தாக்குதல்களுக்குத் தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்குத் தேவை இருக்காது என்று நம்புகிறோம்” என்றார் அவர்.

தவறு செய்யும்போது சிரியாவுக்கு துணை நிற்பதாக ரஷ்யா மற்றும் இரானின் நடவடிக்கைகளை விமர்சித்த அவர், அது அஸாத் மேலும் பல கொலைகளைச் செய்வதற்கு ஊக்கமளிப்பதாகவே அமையும் என்று தெரிவித்தார்.

ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் விளாடிமிர் சஃரன்கோவ்,, அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதல் நடவடிக்கை, சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயல் என்றும் இந்த தாக்குதல் அந்த பிராந்தியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.
அமெரிக்க கருவூல செயலர் ஸ்டீவன் முனுசின் சிரியாவுக்கு எதிரான பொருளாதார தடைகளுக்கு அமெரிக்கா தயாராவதாக கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]