தோல்விக்கு மோசமான களத்தடுப்பே காரணம் : ரங்கன ஹேரத்

பங்களாதேஷ் அணியுடனானத் தோல்விக்கு களத்தடுப்பில் இருந்த பலவீனங்களே பிரதான காரணம் என்று இலங்கை அணியின் டெஸ்ட் தலைவர் ரங்கன ஹேரத் கருத்து வெளியிட்டுள்ளார்.

 ரங்கன ஹேரத்

பங்களாதேஷ் அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி நேற்று தோல்வியடைந்தது. பங்களாதேஷ் இந்த வெற்றியின் மூலம் வரலாறு படைத்திருந்தது. என்றாலும், தோல்வியானது இலங்கையின் அணியின் கிரிக்கெட் கௌரவத்திற்கு பெருத்த சவாலை விடுத்துள்ளது.

நேற்றை போட்டி நிறைவடைந்தப்பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டிருந்த ரங்கன ஹோரத்,

 ரங்கன ஹேரத்

போட்டியில் தோல்வியடைந்தமை மிகவும் கவலைக்குரிய விடயம். எனினும் இப் போட்டியின் மூலம் நிறைய விடயங்களை கற்றுக்கொண்டுள்ளோம் எனக் கூறியிருந்தார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிகொண்டமையானது பங்களாதேஷ் அணியின் 100 ஆவது டெஸ்ட் போட்டி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]