ரகுமானின் கதாயுதம்

ரகுமானின் கதாயுதம்

Kathayutham

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற “ரம்மி” திரைப்படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன்.K இயக்கும் திரைப்படம் “கதாயுதம்”.

இந்த படத்தை ஸ்ரீ வள்ளி ஸ்டுடியோ பட நிறுவனம் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது.

ரம்மி படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்நிறுவனம் தாயரிக்கும் திரைப்படம் இதுவாகும்.

Kathayutham

ஜோக்கர் படத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான நடிகராக கவனிக்கப் பட்டவர் குருசோமசுந்தரம், துருவங்கள் 16, 36 வயதினிலே படத்தின் மூலம் நம்பிக்கை நட்சத்திரமாக வளம் வந்த ரகுமான், இந்த இருவரும் “ கதாயுதம் “ படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் நாயகியாக இந்திய பாக்கிஸ்தான் படத்தின் நாயகி சுஷ்மா ராஜ் நடிக்கிறார்.

மற்றும் காளிவெங்கட், துளசி, ரமா, பாரதிகண்ணன் ஆகியோருடன் இன்னும் சில முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.

Kathayutham

இந்த திரைப்படத்திற்கு வசனம் மோநா.பழனிச்சாமி எழுதியுள்ளதுடன் ஞானம் ஒளிப்பதிவு செய்கிறார்.

கபிலன், மோநா பழனிச்சாமி ஆகியோரின் பாடல் வரிகளுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசை மூலம் உயிரோட்டம் வழங்கியுள்ளார்.

கதாயுதம் படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது, “வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் ஒரு கனவு இருக்கும் அப்படி கனவுகளோடு இருக்கிற இரண்டு பேர் சந்திக்கிறதும், அவங்க கனவு நிறைவேற போராடுறதும் தான் கதை. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டையில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படபிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது என இயக்குனர் பாலகிருஷ்ணன்.K தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]