ரகசிய வாக்கெடுப்பை கோரும் ஐ.தே.க உறுப்பினர்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் சகல பதவிகளுக்கும் ரகசிய வாக்கெடுப்பின் ஊடாகவே உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக அலரி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]