ரகசியத்தை வெளியிட்ட ஆனந்த்ராஜ்!

தமிழ் சினிமாவில் வில்லனாக வலம்வந்த ஆனந்த்ராஜ் சமீபகாலமாக காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘மரகத நாணயம்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவருடைய கதாபாத்திரமான டுவிங்கில் ராமநாதன் என்ற கதாபாத்திரமும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

கிட்டத்தட்ட 30 வருடங்களாக சினிமாவில் நடிகராக வலம்வரும் ஆனந்த்ராஜ் இன்னமும் அதே பொலிவுடன் ரொம்பவும் இளமையாக இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போதும், சமீபத்தில் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்தேன்.

ரகசியத்தை வெளியிட்ட

அவர் என்னை பார்த்து எப்படி இன்னும் இப்படியே இளமையாக இருக்கிறீர்கள் என்று கேட்டார். மது, சிகரெட்டை தொட்டதில்லை. அது தான் காரணம். 30 வருடங்களாக நடித்து வருகிறேன். இப்போது இளம் நடிகர்களோடு தொடர்ந்து நடித்து வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் தொடர்ந்து 20 வருடங்கள் நடிக்கவே ஆசைப்படுகிறேன் என்றார்.

ரகசியத்தை வெளியிட்ட

‘மரகதநாணயம்’ படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, டேனியல், ஆனந்த்ராஜ், ராம்தாஸ், அருண்ராஜ் காமராஜ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சரவன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டில்லி பாபு இப்படத்தை தயாரித்திருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]