யோஷிதவின் பாட்டிக்குப் பிணை

யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி பொரஸ்ட்டை, 25,000 ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணையிலும் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் புத்திக ஸ்ரீ ராகல, இன்று உத்தரவிட்டார்.


இரத்மலானையில் 36 மில்லியன் ரூபா பெறுமதியான காணியொன்றை முறையற்ற வகையில் கொள்வனவுசெய்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.