யோகி பாபுவை பாராட்டியுள்ள விஜய்- காரணம் தெரிந்தா ஷாக் ஆகிடுவிங்க

கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை காதலிக்கும் யோகி பாபுவை நடிகர் விஜய் பாராட்டியுள்ளார். படத்தில் நயன்தாராவை காதலிக்கும் யோகி பாபுவை நடிகர் விஜய் பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருபர்களில் யோகி பாபுவும் ஒருவர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன் தாரா, , சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் கோலமாவு கோகிலா. முழுக்க முழுக்க ஹீரோயினை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில், நயன்தாராவை, யோகிபாபு காதலிப்பது போன்று பாடல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். கல்யாண வயசு என்று தொடங்கும் அந்தப் பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இந்தப் பாடலின் மூலம், அவர் பாடலாசிரியராகவும் மாறியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், இப்பாடல் குறித்து யோகி பாபு கூறுகையில், நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் மளிகைக் கடைக்காரராக நடித்துள்ளேன். படம் முழுக்க நயன்தாராவை சைட் அடித்துக்கொண்டே இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக, ஒரு நடிகையுடன் பேருந்தில் டான்ஸ் ஆடுவது, பாடுவது என்று காட்சிகள் எடுத்த போது, அந்த நடிகை என்னை தொட்டு நடிக்கவே மறுத்துவிட்டார். அப்படியிருக்கும் போது, நயன்தாராவுக்கு உண்மையில் பெரிய மனசு தான். இப்பாடலை பார்த்துவிட்டு தளபதி விஜய் யோகி பாபுவை பாராட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து தல அஜித்திடம் அந்தப் பாடலை காண்பித்து அவரிடமும் பாராட்டு வாங்கயிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]