98 வயதிலும் மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் “யோகா பாட்டி”

யோகா பாட்டி

நாற்பது வயதானாலே வயதாகிவிட்டது. கொலஸ்ட்ரால் குறைக்க வேண்டும். ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டது என்று ஏதேதோ சாக்கு போக்கு சொல்ல ஆரம்பித்து மூன்று வேலை உணவுகளுடன் மூன்று வேலை மருந்துகள் சேர்ந்து கொள்கிறது.

100 வயதை நெருங்கிடும் பாட்டி என்றதும் ஏதோ சைனாவிலோ ஜப்பானிலோ இருக்கக்கூடிய பாட்டி என்று நினைத்து விடாதீர்கள். இந்தப் பாட்டி தமிழகத்தில் பிறந்தவர். இன்றளவும் தமிழகத்தில் வசித்துக் கொண்டிருக்கிறார்.

மத்திய அரசின் 2018 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது.அதில் கோவையைச் சேர்ந்த நானாம்மாள் பாட்டிக்கு பத்ம விபூசண் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
யோக பாட்டி


98 வயதாகும் நானாம்மாள் பாட்டி யோகாவில் செய்த சாதனைகளை பாராட்டும் வகையில் அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பொள்ளாச்சிக்கு அருகில் இருக்கிற ஜமீன் காளியாபுரம் என்ற ஊரில் 1920 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார் நானம்மாள். நானாம்மாள் குடும்பத்தில் தொடர்ந்து ஐந்து தலைமுறைகளாக யோகா செய்தும் கற்றுக் கொடுத்தும் வந்திருக்கிறார்கள். தாத்தா மன்னார்சாமி யோகா செய்யும் போது பார்த்து யோகாவில் நானாம்மாளுக்கு ஆர்வம் மேலோங்கியிருக்கிறது. அன்றிலிருந்து தொடர்ந்து யோகா பயிற்சியை தொடர ஆரம்பித்திருக்கிறார். அப்போது அவருக்கு ஆறு அல்லது எட்டு வயதிருக்கும் என்றும் நினைவு கூர்கிறார். அவர் கூற்றுப் படி பார்த்தால் அவருக்கு தற்போது யோகாவில் 90 வருடத்திற்கும் அதிகமான அனுபவம் இருக்கிறது.

திருமணம் செய்து போகும் வரை தொடர்ந்து யோகா செய்து கொண்டே இருந்திருக்கிறார். திருமணமான பின் புகுந்த வீட்டில் பிறர் முன்னிலையில் செய கூச்சப்பட்டு, தனியறையில் மறைவாக செய்திருக்கிறார் நானாம்மாள்.

பல வருடங்களாக தொடர்ந்து யோகா பயிற்சி மேற்கொள்வதால் நானாம்மாள் பாட்டி முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். யோகா செய்வதனால் எலும்பு மூட்டுகள் வலுப்பெறும், அதோடு உள்ளுறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் கிடைக்கும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இதுவரை ஒரு நாள் கூட யோகா பயிற்சி மேற்கொள்வதை நிறுத்தவில்லை இந்தப் பாட்டி, அதனால் மருத்துவமனை பக்கம் ஒதுங்கியது கூட இல்லை என்கிறார் அசத்தல் பாட்டி.

உணவு

நானாம்மாள் பாட்டியின் காலை உணவாக ராகி, கம்பு, மக்காச்சோளம், பாசிப்பயிறு, வரகு ,தினை,கோதுமை,சிவப்பு அரிசி என இப்படி ஏதாவது ஒரு தானியத்தை வறுத்து அதனை அரைத்து காய்ச்சி அதனோடு மோர் சேர்த்துக் குடிக்கிறார். மதியத்திற்கு சைவ உணவு எடுத்துக் கொள்கிறார். இரவு உணவாக பழமும் அரை டம்ப்ளர் பாலும் குடிக்கிறார். இரவு உணவினை ஏழு மணிக்கே சாப்பிட்டுவிடுகிறார். சர்க்கரையை சேர்ப்பதில்லை. டீ,காபிக்கு பதிலாக சுக்கு காபி கருப்பட்டி கலந்து

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]