யூ டியூப் டிரென்டிங்கில் ’செம வெயிட்டாகும்’ காலா பாடல்- 16 மணி நேரத்திற்குள் இவ்வளவு பார்வையாளர்களா??

மே தினத்தை முன்னிட்டு வெளியான காலா படத்தின் ’செம வெயிட்டு’ பாடல் யூ டியுப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி-பா. ரஞ்சித் கூட்டணியில் விரைவில் வெளிவரவுள்ள படம் காலா. நடிகர் தனுஷ் தயாரித்து வரும் இப்படத்தில் நானா படேகர், ஈஸ்வரி ராவ், ஹுயுமா குரேஷி, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முன்னதாக ஏப்ரல் 27ம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்ட ’காலா’ படம், திரைப்பட தொழிலாளர்களின் நீண்ட நாட்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் தேதி தாமதமானது.

தொடர்ந்து ’காலா’ படம் ஜூன் 7ம் தேதி வெளிவரும் என்று தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்தார். மேலும், இதனுடைய பாடல்கள் வரும் மே 9ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காலா படத்தில் இடம்பெற்றுள்ள ’செம வெயிட்டு’ என்ற பாடல் சிங்கிள் டிராக்காக நேற்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு யூ- டியூபில் வெளியிடப்பட்டது..

வெளியான 16 மணிநேரத்திற்குள் சுமார் 10 லட்சத்து 48 ஆயிரம் பேர் இப்பாடலை பார்த்தனர். மேலும் காலா ’செம வெயிட்டு’ பாடல், யூ-டியூப் டிரெண்டிங்கிலும் முதலிடத்தை பெற்றது.

கூடவே பாடலில் இடம்பெற்றுள்ள ரஜினியின் புகைப்படங்களும் பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் காலாவின் ‘செம வெயிட்டு’ பாடல் தொடர்ந்து அதிக பார்வையாளர்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]