முகப்பு News India யூடியூப் வீடியோ பார்த்து மிருகத்தனமாக பிரசவம் பார்த்த கணவன்- பரிதாபமாக உயிரிழந்த பெண்

யூடியூப் வீடியோ பார்த்து மிருகத்தனமாக பிரசவம் பார்த்த கணவன்- பரிதாபமாக உயிரிழந்த பெண்

திருப்பூரில் யூடியூப் வீடியோ பார்த்து பிரசவம் பார்த்ததால் நிறைமாத கர்ப்பிணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அருகே நல்லூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர்கள் கார்த்திக் – கிருத்திகா தம்பதியினர். கார்த்திக் தனியார் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி கிருத்திகா பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

கடந்த ஆண்டு திருமணமான இந்த தம்பதியின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவே சென்று கொண்டிருந்துள்ளது. இதில் மேலும் மகிழ்ச்சியளிக்கும் விதமாகா கிருத்திகா கர்ப்பமடைந்துள்ளார்.

இதனால் குடும்பமே மகிழ்ச்சியில் திளைந்திருந்தது. அப்பொழுது தான் கார்த்திக் நண்பர் பிரவீன் என்பவரின் உருவில் எமன் அடியெடுத்து வைத்திருக்கிறான்.

அடிக்கடி கார்த்திக் வீட்டிற்கு வரும் பிரவீன், கிரித்திகாவை மருத்துவமனைக்கு எல்லாம் அழைத்து செல்ல வேண்டாம்.

பழையகாலத்தை போல வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம், யூடியூப்பில் இதுகுறித்து பார்த்து கொள்ளலாம் என கூறியுள்ளான்.

அதை கேட்டு கார்த்தியும், தன் மனைவியிடம் கூறி சம்மதம் வாங்கியுள்ளார். ஆரம்பத்தில் கிருத்திகா சம்மதம் தெரிவிக்கவில்லை என்றாலும், கணவரின் ஆசைக்காக சம்மதம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் பிரசவ வலியில் கிருத்திகா துடிதுடித்துள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த கார்த்திக் உடனடியாக பிரவீனை அழைத்துள்ளார்.

பின்னர் யூடியூப் மூலம் இருவரும் பிரசவம் பார்க்கும்பொழுது, மிருகத்தனமாக குழந்தையை வெளியில் இழுத்துள்ளனர்.

இதனால் வலிதாங்க முடியாமல் கிருத்திகா, கார்த்திக் கண்முன்னரே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தை தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com