யூடியூபில் 100 மில்லியன் வியூக்களைத் தாண்டிய ’வாயாடி பெத்த புள்ள…’ பாடல்…

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்தியராஜ் நடிப்பில் முன்னதாக வெளியாகி வெற்றி பெற்ற படம் கனா. இதில் ’வாயாடி பெத்த புள்ள…’ பாடலை சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா பாடியிருந்தார். அவரது மழலை குரல் அனைவரையும் கவர்ந்தது.

இப்பாடல் இணையத்தில் வைரலானது. தற்போது யூடியூப் தளத்தில் 100 மில்லியன் வியூக்களைக் கடந்து சென்று சாதனை படைத்துள்ளது. இச்செய்தியை சிவகார்த்திகேயனி ரசிகர்கள் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை யின் காவிரிப் பாசன விவசாயி சத்யராஜ். தன் மனைவி, மகளுக்கு இணையாக விவசாயம், கிரிக்கெட்டையும் ஒருசேர நேசிக்கிறார். தந்தையின் மரணத்துக்குகூட கலங்காதவர், கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதும் கண்ணில் நீர் ததும்பி நிற்கிறார். அப்பாவைப் பார்த்து வளரும் மகளான ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அந்த கிரிக்கெட் ஆர்வம் அப்படியே தொற்றிக் கொள்கிறது.

பெற்ற தாய் தடுக்க, ஊரார் ஒருபுறம் கைகொடுக்க, எதிர்ப்பும், அணைப்புமாய் கிரிக்கெட்டுடன் இரண்டறக் கலந்து வளர்கிறார் ஐஸ்வர்யா. காவிரிப் பாசனப் பகுதியில் விவசாயம் நொடித்துப் போகிறது. கடன் நெருக்கடி கொடுக்க, அதற்கு மத்தியிலும் மகளின் கிரிக்கெட் ‘கனா’வை நிறை வேற்றப் போராடுகிறார் சத்யராஜ்.

இப்படிப்பட்ட வழக்கமான கதையுடன் வெற்றி பெற்றது கனா. குறுகிய காலத்தில் மாஸ் ஹீரோ அந்தஸ்தை பெற்ற நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்து வருகிறார். இச்செய்தி அவரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]