ஊக்கமருந்து தடைகாலம் நிறைவு – ஏலத்தில் கலந்துகொள்கிறார் யூசுப் பதான்

யூசுப் பதான் இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் இர்பான் பதான். இவரது சகோதரர் யூசுப்பதான். 2008-ம் ஆண்டு அறிமுகமான ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வாங்க முக்கிய காரணமாக இருந்தார்.

இந்திய அணியில் அதிக அளவில் இடம்பிடிக்காவிடிலும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். பிசிசிஐ நடத்தும் உள்ளூர் தொடர்களில் பரோடா அணிக்காக யூசுப்பதான் விளையாடி வருகிறார். கடந்த சீசனில் விளையாடும்போது, இவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. அப்போது தடைவிதிக்கப்பட்ட ஊக்கமருந்தை உட்கொண்டது தெரியவந்ததையடுத்து அவருக்கு ஐந்து மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இதனால் ரஞ்சி டிராபிக்கான பரோடா அணியில் இருந்து யூசுப் பதானை நீக்க பிசிசிஐ வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ரஞ்சி டிராபியில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே யூசுப் பதான் விளையாடினார்.

இந்நிலையில், அவருக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் வருகிற 14-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து வருகிற 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெற உள்ள ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் யூசுப் பதான் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]